உலக சாதனையாளர்கள் குழு அதிகாரிகள் ஆய்வு
மாதனூர் ஒன்றியத்தில் பண்ணை குட்டைகளை உலக சாதனையாளர்கள் குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தலா 3 பண்ணை குட்டைகள் அமைத்தால் மாவட்டத்தில் 2 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட 44 ஊராட்சிகளில் 224 பண்ணை குட்டைகள் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.
இதில் அயித்தம்பட்டு ஊராட்சியில் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ளதை மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், உலக சாதனையாளர்கள் குழு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் பாபு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபா ராஜன் பாபு, கார்த்திக் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளாமூர்த்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story