நாகர்கோவிலில் நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நில அளவையர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நில அளவையர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மையம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நில அளவை கள அலுவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரியின் ஊழியர் விேராத போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வைகுண்டராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கிரிதர், மாநில பொருளாளர் ஸ்டான்லி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார், வருவாய் துறை மாவட்ட தலைவர் ஆனந்த சதீஷ், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story