பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நிழலி எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்குமார் என்பவரது மகள் சுவேதா (வயது17). இவர் கொடுவாய் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் சுவேதா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் சுவேதா மனமுடைந்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்,பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சுவேதாைவ பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதா தற்கொலை செய்துகொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story