புனித சூசையப்பர் ஆலயத்தில்ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
திருப்பூர் புனித சூசையப்பர் ஆலையத்தில் ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நடந்தது. இதில் மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருக்காட்சி பெருவிழா
திருப்பூர் குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இயேசுகிறிஸ்து பாலகனாக பிறந்தபோது 3 ராஜாக்கள் வந்து தரிசித்து சென்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு முடிந்த அடுத்த வாரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நேற்று புனித சூசையப்பர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலய பங்குதந்தை பிலிப் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைபுனித சூசையப்பர் ஆலயத்தில்
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா நடைபெற்றது. கோவை பங்குதந்தை ஆண்டனி ஜேசுராஜ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். விழாவையொட்டி 3 ராஜாக்களை பவனியாக கொண்டு சென்று, இயேசுகிறிஸ்து முன்பாக ராஜாக்கள் வைக்கப்பட்டு திருப்பலி நடைபெற்றது.
பொங்கல் வைத்து வழிபாடு
பின்னர் ஆலயத்தில் உள்ள 17 அன்பியங்கள் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கொண்டாடும் வகையில் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து, பொங்கலை காணிக்கையாக படைத்தனர். இதன் பின்பு அன்பிய மக்கள் பொங்கலை ஐக்கிய விருந்தாக ஒருவொருக்கொருவர் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் ஆலயத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.