தர்மபுரியில் வீட்டு மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சக்தி (வயது 30). இவர் நேற்று தர்மபுரி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி அங்கிருந்து குதித்து விடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மாடியில் ஏறி அந்த வாலிபரை பாதுகாப்பாக மீட்டனர். அப்போது அந்த வாலிபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story