பேரூரணி சிறை ஏட்டு பணியிடை நீக்கம்
தூத்துக்குடி பேரூரணி சிறை ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி:
சிறைத்துறை டி.ஐ.ஜி. உத்தரவின்பேரில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிளைச்சிறை, மாவட்ட சிறைகளுக்கு பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு சங்கர் சோதனைக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2-ந் தேதி தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறைக்கு இரவில் சோதனைக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு மாரிசெல்வம் என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டு சங்கர் விசாரணை நடத்தி, ஏட்டு மாரிச்செல்வத்தை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story