போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாலாஜி. கடந்த 2019-ம் ஆண்டில் இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது அங்கு காளிதாஸ் (வயது 26) என்பவர் உயிரிழந்த வழக்கில் முறையாக விசாரிக்கவில்லை என புகார் எழுந்ததாம். இதுகுறித்து பின்னர் நடத்தப்பட்ட மறுவிசாரணையில் காளிதாஸ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலாஜி மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் பாலாஜி நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story