சேலம் மாவட்ட வன அலுவலர் பணி இடைநீக்கம்


சேலம் மாவட்ட வன அலுவலர் பணி இடைநீக்கம்
x

சேலம் மாவட்ட வன அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வருபவர் கவுதம். இவர் தனது அலுவலகத்திற்கு சரியாக வராமல் இருப்பதாகவும், மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து செல்வதாகவும், இதனால் கையெழுத்து போட வேண்டிய கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சேலம் குரும்பப்பட்டி பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தார். அப்போதும் மாவட்ட வன அலுவலர் கவுதம் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாவட்ட வன அலுவலர் கவுதம் நேற்று திடீரென பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story