சேலத்தில் பெண் மர்ம சாவு-போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு


சேலத்தில் பெண் மர்ம சாவு-போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Feb 2023 1:12 AM IST (Updated: 28 Feb 2023 1:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் உடலை உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றனர். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ெபண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சூரமங்கலம்:

பெண் மர்ம சாவு

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 53). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு மகன்களுடன் பேசிவிட்டு பின்னர் தூங்க சென்றார். வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பழனியம்மாள் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து பழனியம்மாளின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மேற்கொண்டனர். இதனிடையே பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பழனியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சொத்து பிரச்சினை தொடர்பாக பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர் ஒருவரது குடும்பத்தினருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story