தூய்மை மயிலாடுதுறை திட்ட பணிகள்


தூய்மை மயிலாடுதுறை திட்ட பணிகள்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் ஒன்றியத்தில்தூய்மை மயிலாடுதுறை திட்ட பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியத்தில் தூய்மை மயிலாடுதுறை என்ற திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் கடந்த வாரம் முதல் 100 சதவீத தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் குத்தாலம் ஒன்றியத்தில் உள்ள கடலங்குடி, மேலையூர், பெருமாள் கோவில், மாதிரிமங்கலம், மேக்கிரிமங்கலம், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம், கழனிவாசல், கப்பூர், கடக்கம், எடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகள் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடந்தது.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் நடைபெற்ற தூய்மை பணியினை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செயதார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், ஓ.எச்.டி. இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story