சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா


சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா
x

திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்தம் திருவிழா கடந்த ஏப். 26-ந்தேதி தொடங்கி இன்று(வெள்ளிக்கிழமை) வரை 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு மாலையில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று இரவு கிரி வீதி வழியாக கோவில் சேர்தல் நடைபெற்று வந்தது. இன்று(வெள்ளிக்கிழமை) வசந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

இதேபோல் வைகாசி வசந்தம் திருவிழா வருகிற மே24-ந்தேதி தொடங்கி ஜூன் 2-ந்தேதி வரை நடக்கிறது.


Next Story