கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா


கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் கோவிலில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதையொட்டி நேற்று காலையில் கும்ப ஜெபம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை, சகஸ்ரநாமம், அர்ச்சனையும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story