சுவாதி நட்சத்திர பூஜை


சுவாதி நட்சத்திர பூஜை
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள நரசிம்ம பெருமாள்கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 16 வகையான மூலிகைகளால் மூல மந்த்ர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்த வலம் வருதலும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story