சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை


சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை
x

விளாத்திகுளம் யோகி ராம்சுரத்குமார் நாம கேந்திரத்தில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் அமைந்துள்ள யோகி ராம்சுரத்குமார் நாம கேந்திரத்தில், சுவாமி ஜென்ம நட்சத்திரமான வைகாசி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story