சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை பால்குட திருவிழா


சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை பால்குட திருவிழா
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே சேண்டிருப்பு சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை பால்குட திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே சேண்டிருப்பு சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை பால்குட திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சுயம்பு முத்து மாரியம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் ஊராட்சி சேண்டிருப்பு கிராமத்தில் சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 36-ம் ஆண்டு சித்திரை பால்குட திருவிழா கடந்த 23-ந் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து அம்பாள் சிம்ம வாகனம், சூரிய பிரபை, யானை வாகனம், சப்பரம், அன்னபட்சி வாகனம், காமதேனு வாகனம், வெண்ணைத்தாழி அலங்காரம், தேர் புறப்பாடு உள்ளிட்டவை நடந்து முடிந்தது.

பால்குட திருவிழா

விழாவின் முக்கிய நாளான நேற்று சித்திரை பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவேரி தீர்த்த படித்துறையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் மேள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து கோவிலை அடைந்தனர்.

பின்னர் அம்பாளுக்கு பாலபிஷேகம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், அலகு காவடி கரகம் கூண்டு காவடி உள்ளிட்டவை எடுத்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இன்று மஞ்சள் நீர் விளையாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story