அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

மத்திகிரியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

கிருஷ்ணகிரி

மத்திகிரி

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதையடுத்து மத்திகிரி பஸ் நிலையம் அருகில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் தெற்கு பகுதி துணை செயலாளர் சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சாக்கப்பா, முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ், இளம் பாசறை மாவட்ட செயலாளர் சுரேஷ், 44-வது வார்டு நிர்வாகிகள் நாராயணசாமி, சிவக்குமார், நாகராஜ், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story