நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி தூத்துக்குடி பொன்னகரத்தில் உள்ள எஸ்.டி.ஆர். பள்ளிக்கூடத்தில் நடந்தது. இதில் 20 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு விளையாடினர். போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளிக்கூட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அருண் அசோசியேசன் சந்திரமோகன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரிஸ்டைல், பேக் ஸ்டோக், பிரீஸ் டோக், பட்டர் பிளை, மலாடி, பிரீஸ்டைல், ரிலே, மெட்ரீ ரிலே உள்ளிட்ட 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விஜய ஸ்ரீவனிதா, துணை முதல்வர்கள் லியோஷீலா, ஜெனிட்டா, உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமார், நீச்சல் பயிற்சியாளர் கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.