தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி


தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டி தர்மபுரி செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் நேற்று தொடங்கியது. 12 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற நீச்சல் போட்டிகளை, மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ.3,000, 2-ம் பரிசாக. ரூ.2,000, 3-ம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெரும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள். மாநில போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தாசில்தார் ஜெய செல்வன் மற்றும் அலுவலர்கள், நீச்சல் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று (வெள்ளிக்கிழமை) மாணவிகளுக்கு நீச்சல் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மொத்தம் 60 மாணவிகள் முன்பதிவு செய்துள்ளனர்.


Next Story