டாஸ்மாக் மதுபான கடைகளில் விரைவில் ஸ்வைப்பிங் மிஷின் - டெண்டர் வெளியீடு
டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவாங்குவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வாங்குவதை தடுக்க ஸ்வைப்பிங் மிஷின் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 4810 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குவோரிடம் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இந்த புகாரை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் ஸ்வைப்பிங் மிஷின் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் பரிவர்த்தனை வசதியை அமைக்க வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story