கீழப்பாவூர் நூலகத்துக்கு மேஜை, நாற்காலிகள்
தி.மு.க. சார்பில் கீழப்பாவூர் நூலகத்துக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த தினத்தை முன்னிட்டு கீழப்பாவூர் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, நூலகத்துக்கு 3 மேைஜகள், 3 நாற்காலிகளை நூலகர் ரா.திருநாவுக்கரசியிடம் வழங்கினார். மேலும் அவர் நூலகத்துக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி பெரும்புரவலராக இணைந்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் ஜெகதீசன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story