தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் தர்ணா
திடீர் இடமாற்றம் செய்ததால் தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
திடீர் இடமாற்றம் செய்ததால் தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் தர்ணாவில் ஈடுபட்டார்.
செய்யாறில் தாசில்தாராக பணியாற்றிய பாலமுருகன், சேத்துப்பட்டு தாசில்தாராக மாற்றப்பட்டு பணிகளை மேற்கொண்டு இருந்தார். திடீரென்று அவர் செய்யாறு தாசில்தாராக மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதிருப்தியடைந்ததாக கூறப்படும் தாசில்தார் பாலமுருகன் சேத்துப்பட்டு தாலுகா அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story