மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட தாசில்தார்


மழைநீரை அகற்றும் பணியில்  ஈடுபட்ட தாசில்தார்
x

நாட்டறம்பள்ளி அருகே குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் தாசில்தார் ஈடுபட்டார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி- திருப்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் செல்லும் வழிக்கு இடையூறாக உள்ள மேட்டுப்பகுதியில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக, அருகே உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டு தண்ணீர் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார் அதை தொடர்ந்து உடனடியாக திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் மேற்படி பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டனர்.

கொட்டும் மழையிலும் நின்று நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story