மழைநீரை அப்புறப்படுத்த தாசில்தார் ஆய்வு


மழைநீரை அப்புறப்படுத்த தாசில்தார் ஆய்வு
x

ஊசூர் வட்டாரத்தில் மழைநீரை அப்புறப்படுத்த தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஊசூர் வட்டாரத்தில் ஊசூர், சேக்கனூர், தெள்ளூர், அத்தியூர் மற்றும் பூதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். மழை நீர் செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைநீர் ஆங்காங்கே தேங்கிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும், மழை நீரை அப்புறப்படுதவும் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் நேற்று, ஊசூர் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மண்டல துணை தாசில்தார் சுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமாரி கண்ணன், மாலதி சுரேஷ்பாபு, தேவிசுரேஷ், வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story