லாரி சக்கரத்தில் சிக்கி தையல் தொழிலாளி சாவு


லாரி சக்கரத்தில் சிக்கி தையல் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Feb 2023 12:36 AM IST (Updated: 24 Feb 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

லாரி சக்கரத்தில் சிக்கி தையல் தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 54). தையல் தொழிலாளி. இவரது மகன் குமரவேல் (வயது 37), சிங்கப்பூரில் பணியாற்றிவிட்டு சொந்த ஊரில் வசித்து வருகிறார். சுந்தரம்பள்ளி அருகே உள்ள வேலவெள்ளி கிராமத்தில் இவர்களது உறவினர் இறந்து விட்டார். இதனையொட்டி குமரவேல் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று துக்கம் விசாரித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காக்கங்கரை ஏரி பகுதியில் வந்தபோது அதே வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளை முந்தி சென்று கொண்டிருந்தது.

அப்போது மோட்டார் சைக்கிள் கண்ணாடி மீது உரசியதில் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர். அப்போது ரங்கன், லாரி பின் சக்கரத்தில் விழுந்ததில் உடல் நசுங்கி இறந்து விட்டார். குமரவேல் படுகாயம் அடைந்தார். அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் ெசன்ற லாரியையும் அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.


Next Story