தையல்காரர் தற்கொலை


தையல்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2023 1:00 AM IST (Updated: 22 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் அஸ்தம்பட்டி சின்னபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 53), தையல்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வெங்கடாஜலம் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வெங்கடாஜலம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story