தையற் கலைஞர்கள் மே தின ஊர்வலம்


தையற் கலைஞர்கள் மே தின ஊர்வலம்
x

ஆரணியில் தையற் கலைஞர்கள் மே தின ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்றம் சங்கத்தின் சார்பாக 38-வது ஆண்டு மே தின விழாவை முன்னிட்டு அண்ணா சிலை அருகில் இருந்து தையல் கலைஞர்கள் மே தின ஊர்வலம் நடத்தினர்.

ஆரணி கிளை தலைவர் கே.சேகர் தலைமை தாங்கினார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. அப்போது காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை அருகில் அமைப்பின் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் செயலாளர் விஷால், பொருளாளர் விநாயகமூர்த்தி, கவுரவ தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட தலைவர் உதயசங்கர், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் கே.ஏ.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story