2-ம் கட்ட அகழாய்வில் தக்களி கண்ெடடுப்பு


2-ம் கட்ட அகழாய்வில் தக்களி கண்ெடடுப்பு
x

2-ம் கட்ட அகழாய்வில் தக்களி கண்ெடடுக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 6 அடி ஆழம் வரை 6 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், எடை கற்கள், கண்ணாடி மணிகள், வணிக முத்திரைகள், சங்கு வளையல்கள் உள்பட 1,192 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெசவு தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய தக்களி சேதமடைந்த நிலையில் தற்போது கிடைத்துள்ளது. இரும்புடன் இணைக்கப்பட்டு தக்களியை முன்னோர்கள் நெசவு தொழிலுக்கு அதிகம் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முதல்கட்ட அகழாய்வை விட கூடுதலாக அதுவும் அடுத்தடுத்து அரிய பொருட்கள் 2-ம் கட்ட அகழாய்வில் கிடைத்து வருகின்றன எனவும் தெரிவித்தனர்.


Next Story