இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 11 படகுகள் மீது நடவடிக்கை


இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி   மீன்பிடித்த 11 படகுகள் மீது நடவடிக்கை
x

சேதுபாவாசத்திரம் அருகே இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 11 படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 11 படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரோந்து பணி

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், 5 நாட்டிக்கல் கடல் மைலைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டும் என்ற விதியை மீறி கரையோரங்களில் மீன்பிடிப்பதாகவும், கடலோர காவல் படைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதைத்தொடர்ந்து கடலில் தஞ்சை மீன் துறை ஆய்வாளர் துரைராஜ், வேதாரண்யம் மீன் துறை ஆய்வாளர் நடேச ராஜா, திருவாரூர் கடல் அமலாக்கப் பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

முத்துப்பேட்டை செல்லக்கண்ணி வாய்க்கால் அருகே 3 நாட்டிகல் கடல் மைலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த 8 விசைப்படகுகளும், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளும் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரியவந்தது. மேலும், 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்துக்கு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 விசைப்படகும் பிடிபட்டது. இந்த 11 படகுகள் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story