15 வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை


15 வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 April 2023 12:30 AM IST (Updated: 2 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகரன், செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு- செலவு கணக்குகள் பேரூராட்சி உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அஞ்சு வட்டத் தம்மன் கோவிலில் பங்குனி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பேரூராட்சி சார்பில் சுகாதாரம், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தட்டுப்பாடின்றி...

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பேரூராட்சி பொது நிதியில் இருந்து 14-வது வார்டு நேதாஜி நகர் சாலையை பழுது நீக்கம் செய்தல், 12-வது வார்டு அங்காளம்மன் கோவில் தெரு ஓரத்தில் பேவர் பிளாக் பதித்தல், போலீஸ் லைன் சாலையை பழுது நீக்கம் செய்தல், மணல்மேடு சாலையை பழுது நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இளநிலை உதவியாளர் சித்திரகலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story