மலேரியா தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு
பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உலக மலேரியா தினத்தையொட்டி பொதுமக்களிடையே உறுதிமொழி, மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்த வேண்டும் என வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் பானுமதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர் நிகிதா தலைமை தாங்கினார். பூச்சியியல் வல்லுனர் முனுசாமி, உதவி இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்று்கொண்டனர்.
அப்போது மலேரியா நோய் பரவுவது சிகிச்சைக்கான முறை முதிர் கொசு கட்டுப்படுத்துதல் போன்றவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ் நன்றி கூறினார்.