கெங்கை அம்மன் திருவிழா குறித்து பேச்சுவார்த்தை


கெங்கை அம்மன் திருவிழா குறித்து பேச்சுவார்த்தை
x

துருவம் கிராமத்தில் கெங்கை அம்மன் திருவிழா குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகா, மேல்மாங்குப்பம் அடுத்த துருவம் கிராமத்தில் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவை இன்று (புதன் கிழமை) நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று கே.வி.குப்பம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா தலைமை தாங்கினார். இதில், கெங்கை அம்மனுக்கு சீர்வரிசை கொடுக்கப்போவது யார்? என்பது குறித்து இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு அம்மன் சீர்வரிசை கொடுத்த குடும்பத்தினர் இந்த ஆண்டும் சீர் வரிசை கொடுத்து திருவிழா நடத்துவது என்று இரு தரப்பினரின் முன்னிலையில் ஒரு மனதாகத் தீர்மானித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதில், தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story