பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்கள் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தாலுகா வாரியாக சிறப்பு முகாம்கள்


பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்கள் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தாலுகா வாரியாக சிறப்பு முகாம்கள்
x

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்கள் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தாலுகா வாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்கள் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தாலுகா வாரியாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) போளூர் தாலுகா அலுவலகத்திலும், 17-ந் தேதி ஆரணி தாலுகா அலுவலகத்திலும், 18-ந் தேதி கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்திலும், 23-ந் தேதி செய்யாறு தாலுகா அலுவலகத்திலும், 24-ந் தேதி வந்தவாசி தாலுகா அலுவலகத்திலும், 25-ந் தேதி திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திலும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

கடன் மனுக்களை அளிக்க விரும்புகிறவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், மாணவர் என்பதற்கான உறுதிச்சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது அல்லது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சமூகத்தினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story