தாமரைமொழி முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம்
தாமரைமொழி முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
தாமரைமொழி:
சாத்தான்குளம் அருகே தாமரைமொழி முத்தாரம்மன், சந்தனமாரியம்மன் மற்றும் கபிலவிநாயகர் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் கோவிலில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன், சந்தன மாரியம்மன், கபிலவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. கோபுரகலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story