"இன்னொரு மொழியால் தமிழை அழிக்க முடியாது": கம்பன் விழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை பேச்சு
இன்னொரு மொழியால் தமிழை அழிக்க முடியாது என தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
உலகம் நம் நாட்டை நோக்கி வருவதற்கான முக்கிய காரணம் நம் இதிகாசங்கள். புதிய கல்விக்கொள்கை என்ன சொல்கிறது என்றால், ஆரம்ப கல்வியை தாய் மொழியிலும், அதே நேரத்தில் மற்றொரு மொழியை கற்கவேண்டும் எனவும் கூறுகிறது.
கம்பன் வடமொழியை கற்றதால் தான் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்னொரு மொழியை படிப்பதால் தமிழை அழிக்க முடியாது. தமிழ் வாழும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story