இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் - உயர் கல்வித்துறை உத்தரவு


இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் - உயர் கல்வித்துறை உத்தரவு
x

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும்,தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும்.

சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்துள்ள தகவலை அடுத்து உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story