அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்மன்ற விழா
அரசு மருத்துவ கல்லூரியில் தமிழ்மன்ற விழா நடந்தது
மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ் மன்றத்தின் சார்பில் ஞாழல் -23 என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் 2 நாள் விழா நடந்தது. கல்லூரி முதல்வரும், அரசு ஆஸ்பத்திரி டீனுமான ரத்தினவேல் தலைமை தாங்கினார். துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, கல்லூரி பேராசிரியர் இளவழகன் கலந்து கொண்டு பேசினார். 2-வது நாளில், வாழ்க்கை விருப்பம் போல வாழவே- வரைமுறைகளோடு வாழவே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இதற்கு நடுவராக மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை துறை தலைவரும், தமிழ் மன்றத்தின் தலைவருமான தினகரன் செயல்பட்டார். இதனை தொடர்ந்து, தமிழ் மன்றத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, தமிழ் நாடகம் ஆகியவை நடந்தது. மேலும், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கோலப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்மன்ற செயலாளர்கள், மருத்துவ மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.