பால் வினியோக மையம் திறப்பு
வைத்தீஸ்வரன் கோவிலில் புதிய பால் வினியோக மையம் திறக்கப்பட்டது
சீர்காழி:
சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயில் மெயின் ரோட்டில் தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் புதிய வினியோக மையம் திறக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளர் தமிழ் பால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கே.தியாகராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மையத்தை திறந்து வைத்தார் தமிழ்பால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரி சிவக்குமார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.வினியோகஸ்தர் சுந்தரமகாலிங்கம், தமிழ் பால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கே.தியாகராஜனுக்கு சால்வை அணிவித்தார். இதில் தமிழ் பால் நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த வினியோக மையத்தின் வினியோகஸ்தரான சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். தமிழ் பால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரி சிவக்குமார் கூறுகையில், இளைஞர்கள், வாழ்வில் முன்னேறுவதற்கும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும் தற்போது 80-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் மூலம் 10 மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையத்தை கொண்டு வருவதே தமிழ் பால் நிறுவனத்தின் நோக்கம். ஒவ்வொரு ஊர்களுக்கும் இது மாதிரியான வினியோக மையத்தை அமைத்து கொண்டுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களைதொடர்பு கொண்டு அவர்களும் வாழ்வில் வளர்ச்சி பெறலாம் என்றார்.