தமிழக- ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை


தமிழக- ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை
x

திருப்பத்தூரில் தமிழக- ஆந்திர மாநில போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருப்பத்தூர்-சித்தூர் மாவட்டங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், சித்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர்லசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் தமிழக மற்றும் ஆந்திர மாநில குற்றவாளிகளை பற்றிய தகவல் பரிமாற்றம், இரு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் ஒருங்கிணைந்து குற்ற தடுப்பு சம்பந்தமான தகவல்களை பரிமாற்றம் செய்து விரைவாக குற்றங்களை தடுக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் பற்றிய தகவல் பரிமாற்றம், திருட்டு, வழிப்பறி குற்றங்கள் மற்றும் ரவுடிகள், சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்துபவர்கள் தொடர்பாகவும், சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சித்தூர் மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story