தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க ஆலோசனை கூட்டம்
x

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுரவ தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிளை தலைவர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் சங்க வளர்ச்சி குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் மின் பணி வேலைகளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. வீடு கட்டும் உரிமையாளர்களுக்கு தரமான மின்சாதன பொருட்களை கொண்டு வயரிங் வேலை செய்ய வலியுறுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், வாரச்சந்தை நாட்களான திங்கள்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் ரோடு ஓரங்களில் கடைகள் போடுவதை தவிர்த்து சந்தைக்கு உள்ளேயே கடைகளை வைத்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர தலைவராக இளங்கோவனும், செயலாளராக ஜெயசீலனும், பொருளாளராக சசிக்குமாரும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சங்கத்திற்கு பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story