தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜய முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் மனோஜ் குமார் ஆகியோர் பேசினர். மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் புதுக்கோட்டை, பாரைப்பட்டி, புலியூரான், அச்சம்தவிழ்த்தான் ஆகிய பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Next Story