தமிழக அரசு அதிரடி உத்தரவு; 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு


தமிழக அரசு அதிரடி உத்தரவு; 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு
x

தமிழ்நாடு அரசு நேற்று அதிரடியாக பிறப்பித்த உத்தரவின் மூலம் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். அதோடு 64 டி.எஸ்.பி.க்களும் கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றார்கள்.

சென்னை,

பதவி உயர்வு

1. அசோக் குமார்- வேலூர் போலீஸ் பயிற்சி பள்ளியில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று வேலூரில் உள்ள 15-வது பட்டாலியன் சிறப்பு போலீஸ் படைக்கு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பொன் ராம்- செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

3. ரவி சேகரன்- அரியலூர் மாவட்ட 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையிட உதவி ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. ஆசை தம்பி- திருச்சி மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று திருச்சி நகர தலைமையிட துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

5. முத்துக்கருப்பன்- ராணிப்பேட்டை மாவட்ட 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்த்தப்பட்டு பழனி 14-வது பட்டாலியன் சிறப்பு போலீஸ் கமாண்டராக பதவி ஏற்பார்.

அண்ணாமலை

6. ஜானகிராமன்- ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றும் இவர் ஆவடி ரெஜிமெண்டல் மையத்தின் கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.

7. சந்திரமவுலி-நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக உள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள இவர் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரியின் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. மங்கலேஸ்வரன்- பழனி 14-வது பட்டாலியன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

9. குணசேகரன்- வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர் பதவி உயர்வு பெற்று சேலம் நகர தலைமையிட துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

10. அண்ணாமலை- தர்மபுரி மாவட்ட தலைமையிட கூடுதல் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர் பதவி உயர்வு பெற்று சென்னை போதைப்பொருள் சி.ஐ.டி. சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை துணை கமிஷனர்

11. மாரி ராஜன்- நெல்லை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு மூலம் தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. மோகன் நவாஸ்- நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இவர் பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

13. சுப்பராஜ்- திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் பதவி உயர்வு மூலம் டி.ஜி.பி. அலுவலகத்தில் நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.

14. கெங்கைராஜ்- ஆவடி சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றும் இவர் பதவி உயர்வு பெற்று சென்னை போலீஸ் அகடமியின் நிர்வாக பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

64 டி.எஸ்.பி.க்கள்

நேற்று இதேபோல் தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் 64 டி.எஸ்.பி.க்கள் (துணை போலீஸ் சூப்பிரண்டுகள்) கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் யுவராஜ், கலைச்செல்வன், ரமேஷ்பாபு, வெற்றி செழியன், முத்துவேல் பாண்டி, லட்சுமணன், அரிகுமார், சார்லஸ் சாம்ராஜ், சிவராஜன், வேல்முருகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.

6 சூப்பிரண்டுகள் மாற்றம்

நேற்று 6 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். அதன் விவரம் வருமாறு :-

1. கவுதம் கோயல்- மதுரை தலைமையிட துணை கமிஷனராக உள்ள இவர் சேலம் வடக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

2. சந்திரசேகரன்- வேலூர் 15-வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றும் இவர் சென்னை மரைன் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. மீனா- சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றும் இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையிட உதவி ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவர் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றுவார்.

4. சக்திவேல்- சென்னை உளவுப்பிரிவு (2) துணை கமிஷனராக இருக்கும் இவர் கொளத்தூர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ராமமூர்த்தி- சென்னை நிர்வாக பிரிவு துணை கமிஷனராக பணியில் உள்ள இவர் உளவுப்பிரிவு (2) துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

6. அய்யாசாமி- பழனி 14-வது பட்டாலியன் கமாண்டராக பணியாற்றும் இவர் பூந்தமல்லி 13-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.


Next Story