தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு துணைத்தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தென்னரசு, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story