தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஊா்வலம் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து ெதாடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.