பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு
பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன், முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கியும், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
அதில் ,
பொங்கல் தொகுப்பு கிடங்கில் நகர்வு செய்த தரமான பச்சரிசி , சர்க்கரையை வழங்க வேண்டும் .கரும்பின்தோகையையா வெட்டாமல் முழு கரும்பையும் வழங்க வேண்டும்.எந்த விதமான புகார்களுக்கு இடமளிக்காமல் கரும்பு விநியோகம் செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story