6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சென்னை,
6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல்தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் .
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனிவிஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.