விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தல்


விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தினார்.

நீலகிரி

கோத்தகிரி

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வலியுறுத்தினார்.

நஷ்டத்தில் டேன்டீ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தாயகம் திரும்பிய மக்களுக்காக தொடங்கப்பட்ட அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன் டீ) நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை வனத்துறையிடம் ஒப்படைத்தால், ஆயிரக்கணக்கான தாயகம் திரும்பிய தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். டேன்டீயை வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அரசு தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் குத்தகைக்கு பிரித்து கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகைச்சுவையாக உள்ளது

நஷ்டத்தில் இயங்கி வரும் டேன் டீ யை மத்திய அரசுக்கு ஒப்படைத்தால் அதை லாபகரமாக செயல்படுத்துவோம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. ஏற்கனவே நல்ல லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி வரும் மத்திய அரசு, டேன்டீயை மட்டும் எப்படி லாபத்தில் இயக்க முடியும். அவரது பேச்சு நகைச்சுவையாக தான் உள்ளது.

வனப்பகுதியில் இருந்து யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகள் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொன்று, கட்டுப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் செக் ஷன் 17 பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆ.ராசா எம்.பி., 4,900 ஏக்கர் நிலத்திற்கு முதல்கட்டமாக பட்டா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல படிப்படியாக அனைவருக்கும் பட்டா வழங்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story