தமிழக கவர்னரின் செயல் நாகரீகமற்றது-வாழப்பாடியில் கி.வீரமணி பேச்சு


தமிழக கவர்னரின் செயல் நாகரீகமற்றது-வாழப்பாடியில் கி.வீரமணி பேச்சு
x

தமிழக கவர்னரின் செயல் நாகரீகமற்றது என்று வாழப்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.

சேலம்

வாழப்பாடி:

சேலம் கிழக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், வாழப்பாடி பஸ் நிலையத்தில் தந்தை பெரியாரின் 49-வது நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் மண்டல இளைஞரணி செயலாளர் ப.வேல்முருகன் வரவேற்றார். மூத்த நிர்வாகி வி.சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மு.மோகன்ராஜ், கார்முகிலன், சத்தியமூர்த்தி, வீரன், மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு சமஉரிமை கிடைத்ததற்கும், பெண்கள் உயர் பதவிகளுக்கு வந்ததற்கும் தந்தை பெரியார் முழு முதற்காரணமாவார். அடித்தட்டு மக்களை, கோவில் அர்ச்சகராக்கி சமூக நீதியை நிலைநாட்டியது தந்தை பெரியாரின் வழி வந்த திராவிட கட்சிகள். இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மிகச் சிறப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல் நாகரீகமற்றது. தமிழக மக்கள் பெரியாரால் வளர்க்கப்பட்டு போதிய விழிப்புணர்வு பெற்றவர்கள் என்பதை கவர்னர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சக்கரவர்த்தி, மாதேஸ்வரன், நகர செயலாளர் செல்வம், திராவிடர் கழக மண்டல செயலாளர் விடுதலைச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில இளைஞரணி செயலாளர் காசி இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story