தமிழ்நாடு கிராம வங்கி ரூ.418¼ கோடி நிகரலாபம் ஈட்டி உள்ளது


தமிழ்நாடு கிராம வங்கி ரூ.418¼ கோடி நிகரலாபம் ஈட்டி உள்ளது
x

தமிழ்நாடு கிராம வங்கி ரூ.418¼ கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக வங்கி தலைவர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

சேலம்,

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அன்று பல்லவன் கிராம வங்கியையும், பாண்டியன் கிராம வங்கியையும் இணைத்து இந்தியன் வங்கி சார்புடைய அரசு வங்கியாக தமிழ்நாடு கிராம வங்கி தொடங்கப்பட்டது.

4-வது நிதியாண்டின் முடிவில், வங்கியின் மொத்த வணிகம் கடந்த ஆண்டில் இருந்து ரூ.5 ஆயிரத்து 707 கோடி (16.44 சதவீதம்) அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 417 கோடியை எட்டியுள்ளது. மொத்த லாபம் ரூ.692.52 கோடியாக உயர்ந்ததுடன், நிகர லாபம் 82.43 சதவீத வளர்ச்சியுடன் ரூ.418.28 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கி சேவைகள்

கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் வங்கியின் நிகர வராக்கடன் அளவு பூஜ்ஜியம் ஆகும். தமிழ்நாடு கிராம வங்கி கடந்த நிதியாண்டில் மேலும் 11 கிளைகளை திறந்து மொத்தம் 655 கிளைகளுடன் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக 37 மாவட்டங்களின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு தனது சேவையை அளித்து வருகிறது.

டிஜிட்டல் சேவையை வழங்கும் பொருட்டு வங்கி சேமிப்பு கணக்குதாரர்களுக்கு பெருமளவில் டெபிட் கார்டு வழங்கி உள்ளது. அனைத்து கிளைகளின் மூலமும் என்.இ.எப்.டி., ஆ.டி.ஜி.எஸ்., ஐ.எம்.பி.எஸ். சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கி வருகிறது. விரைவில் மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story