இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
சென்னை
சென்னை,
வட சென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்த பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது ;
வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3வது நிலையில் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது.விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது.கடந்த காலங்களை விட 2,500 மெகாவாட் கூடுதல் மின் தேவை உள்ளது.நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3வது நிலையில் டிசம்பரில் மின்உற்பத்தி தொடங்கப்படும்
மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஓராண்டில் 24 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றியிருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்
Related Tags :
Next Story