தமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடந்தது
தேனி
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இருமாநில போலீசார் ஆலோசனை கூட்டம் தேக்கடியில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், கேரள மாநிலம் சார்பில் கட்டப்பனை போலீஸ் துணை சூப்பிரண்டு நிஷாத்மோன், குமுளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகப்படும்படியான வாகனங்களின் எண், தனிநபர் தகவல்கள், செல்போன் எண் உள்ளிட்டவற்றை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இரு மாநில அதிகாரிகளும் இணைந்து சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story